• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2018ம் ஆண்டுக்கான” சியோல் அமைதி விருது ” பிரதமர் மோடிக்கு அறிவிப்பு

October 24, 2018 தண்டோரா குழு

தென் கொரியாவின் மிக உயரிய சியோல் அமைதி பரிசு Modinomics மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்ததால் பிரதமர் மோடிக்கு வழங்கப்படவுள்ளது.

சியோல் அமைதி விருது என்பது 1990ம் ஆண்டு தென்கொரியாவில் உள்ள சியோல் என்ற இடத்தில் அறிவிக்கப்பட்டது.உலக நாடுகள் மத்தியில் நட்புணர்வை வளர்க்க மற்றும் அமைதியை நிலைநாட்ட உதவிய நபர்களை அங்கீகரிக்கும் விதமாக இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,2018ம் ஆண்டின் சியோல் அமைதி விருது இந்திய பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.இந்த விருதை பெறும் 14வது நபர் மோடி.உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியாவை,பொருளாதார வளர்ச்சி மற்றும் மனிதவளத்தில் மேம்பாடு அடைய செய்ததற்காக மோடிக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த விருது மோடிக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.தனக்கு இந்த விருதை அறிவித்ததற்காக கொரிய குடியரசிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க