• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ‘பெடல் பார் கிளீன் இந்தியா’ சைக்கிள் விழிப்புணர்வு பேரணி

October 24, 2018 தண்டோரா குழு

ரோட்டரி சங்கங்கள் மற்றும் ஆர்.ஏ.எப் பட்டாலியன் இணைந்து கோவை டூ கொச்சி சைக்கிள் பேரணியை இன்று துவங்கியது.தூய்மை இந்திய திட்டத்தின் கீழ் ‘பெடல் பார் கிளீன் இந்தியா’ என்ற தலைப்பில் இந்த சைக்கிள் விழிப்புணர்வு பேரணி கோவை வ.உ.சி. மைதானத்தில் இருந்து ஒற்றப்பாலம்,திருச்சூர் வழியாக சுமார் 200 கி.மீ தூரம் பயணித்து கொச்சி விமான நிலையத்தை அடைந்து நிறைவுபெறவுள்ளது. அங்கு ‘ரோட்டரி கிளப் ஆப் அங்கமாலி’ சார்பாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.இந்த பேரணியில் சசுமார் 1௦௦க்கும் மேற்பட்டோர் சைக்கிளில் பயணிக்கவுள்ளனர்.

பேரணியினை கோவை மாநகராட்சி கமிஷனர்,கார்த்திகேயன் துவங்கி வைத்தார்.கௌரவ விருந்தினராக சர்வதேச ரோட்டரி இயக்குனர் ரோட்டரியன் ராஜதுரை,ஜி. மைக்கல் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர் ஏ.வி.பதி,மாவட்ட செயலாளர் ரோட்டேரியன் செல்லா,மாவட்ட இயக்குனர் ரோட்டேரியன் லட்சுமணன்,துணை ஆளுனர்கள்,மாவட்ட ரோட்டராக்ட் பிரதிநிதி ரோட்டேரியன் சிபின்,ரோட்டரி மற்றும் ரோட்டராக்ட் மாவட்ட அதிகாரிகள் மற்றும் கோவையில் உள்ள 36 ரோட்டரி சங்கங்களின் தலைவர்கள்,செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

மேலும்,இந்நிகழ்ச்சியில் சுந்தராபுரம் அபிராமி மருத்துவமனை மருத்துவர்கள்,செவிலியர்கள்,ரோட்டரி சங்கங்ககளின் நிர்வாகிகள்,கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி 2.5 கி.மீ தூரம் நடைபயணமாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

மத்திய,மாநில அரசுகள் கொண்டுவரும் இதுபோன்ற திட்டங்களை வரவேற்பதோடு,இதுபோன்ற நிகழ்ச்சியின்,மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ரோட்டரி சங்கங்ககளின் நோக்கமாககும்.மேலும் நாட்டில் போலியோ ஒழிப்பு திட்டத்தை கையில் எடுத்து அரசுடன் இணைந்து பெரும் பங்காற்றிவருவாத ரோட்டரி சங்கங்கள் தெரிவித்துள்ளன.இந்த பேரணி உலக போலியோ தினம்,காந்தியின் 150 வது பிறந்த தினம் மற்றும் ரோட்ரியின் சர்வதேச தினம்,ஆகியன இந்த பேரணியின் நோக்கமாகும்.

மேலும் படிக்க