• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

அரசு அலுவலகங்களில் ஓணம் கொண்டாட தடை கேரள அரசு அதிரடி உத்தரவு

September 2, 2016 தண்டோரா குழு

தென்மேற்கு மாநிலமான கேரள மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் பணி நேரத்தின் போது ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்கு அம்மாநில அரசு தடை பிறப்பித்துள்ளது.

கேரள மாநிலத்தின் அறுவடை திருநாளான ‘திருவோணம்’ பண்டிகைக்கான இந்த ஆண்டு கொண்டாட்டம் வரும் 12ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளில் கேரள மக்கள் உற்சாகமாகச் செய்து வருகின்றனர். ஓணம் பண்டிகையின் போது, பல வண்ண மலர்களில், அத்தப்பூ என்னும் ‘பூக்கோலம்’ போட்டுப் பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மேலும், பத்து நாட்கள் நடைபெறும் இந்த பண்டிகையின் போது அரசு அலுவலகங்கள்,வீடுகள்,கோயில்கள்,என்று அனைத்து இடங்களிலும் பூ கோலங்கள் அலங்கரிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில்,கேரள மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் பணி நேரத்தின் போது ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான மாநில அரசு தடை விதித்துள்ளது.

இதைக்குறித்து கேரள தலைமைச் செயலர் எஸ்.எம்.விஜய் ஆனந்த் பேசுகையில்,அரசு அலுவலக பணி நேரங்களில் ஓணம் உள்ளிட்ட எந்தவொரு பண்டிகையையும் கொண்டாடக் கூடாது.அலுவலக பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் போது பொதுமக்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படக்கூடாது.அனைத்துத் துறைகளின் தலைவர்களும் அரசின் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க