• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்திற்குப் பொறுப்பு ஆளுநர் நியமனம்

September 1, 2016 தண்டோரா குழு

மகாராஷ்டிர மாநில ஆளுநருக்குக் கூடுதல் பொறுப்பாகத் தமிழக ஆளுநராக நியமித்து குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தமிழக ஆளுநராக கே.ரோசையா நியமிக்கப்பட்டார்.ஆளுநர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.அதன்படி, ரோசையாவின் பதவிக் காலம் நிறைவடைந்தது.

இதையெடுத்து தமிழக ஆளுநராக குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் நியமிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தன.

இந்நிலையில், தமிழக ஆளுனரை நியமிக்கும் வரை அப்பதவியின் பொறுப்பை கூடுதலாக மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சென்னமனேணி வித்யாசாகர் ராவ் கவனிப்பார் எனக் குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜி தற்போது உத்தரவிட்டுள்ளார்.

ஆளுநர் ரோசையா,ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் வெமுரு என்ற ஊரில் 1933 ஆம் ஆண்டு ஜூலை 4ம் தேதி பிறந்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் ஆந்திர அமைச்சரவையில் இருமுறை போக்குவரத்து அமைச்சராகவும், ஒருமுறை உள்துறை அமைச்சராகவும்,4 முறை நிதி அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

மேலும்,ஆந்திராவில் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின் ரோசையா முதல்வராக நியமிக்கப்பட்டார்.ஆனால்,தெலுங்கானா போராட்டத்தைத் தொடர்ந்து,கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து அடுத்த 2 மாதத்தில் தமிழக ஆளுநராக ரோசையா நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க