October 13, 2018
தண்டோரா குழு
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு என விஜய்யின் தந்தையும்,இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்துக்கு மக்கள் இயக்கம் என பெயர் சூட்டி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார்.சமீபத்தில் சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய சில விஷயங்களை தொடர்ந்து அவர் மீது அரசியல் விமர்சனங்களும்,கருத்துகளும் பெருகி வருகிறது.விஜய்யின் அரசியல் பேச்சை தமிழக அமைச்சர்கள் எதிர்த்தனர்.
இந்நிலையில்,நடிகர் விஜய்யின் தந்தையும்,இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணியில் நிகழும் மகா புஷ்கரம் விழாவில் கலந்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு. அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என தமிழன் என்ற முறையில் விரும்புகிறேன்.வழக்கறிஞர்கள், விவசாயிகள் என பல துறைகளை சார்ந்தவர்கள் அரசியலுக்கு வரும் போது மக்களால் உயர்த்தப்பட்டவர்,மக்களுக்கு நல்லது செய்வதற்கு வந்தால் அதில் என்ன தவறு.விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள்.பிறப்பாக கிறிஸ்தவராக இருந்தாலும் இந்தியாவில் பிறந்ததால் இந்து மதத்தை பின்பற்றுகிறேன்.என்னை ஆன்மீகவாதியாக மாற்றியது சத்குரு ஜக்கி வாசுதேவ்தான்”.இவ்வாறு பேசினார்.