October 13, 2018
தண்டோரா குழு
தமிழக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி(58) மாரடைப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.
தமிழக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பு காரணமாக சென்னை அடையாரில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.மறைந்த பரிதி இளம்வழுதி,தமிழக சட்டமன்ற உறுப்பினராக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.1989 முதல் 2011 வரை 28 ஆண்டுகள் தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.1996 – 2001 காலகட்டத்தில் சட்டமன்ற துணை தலைவராக பதவி வகித்தார்.
மேலும்,2006 – 2011 திமுக ஆட்சி காலகட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.பின்னர் திமுகவில் இருந்து 2013-ம் ஆண்டு விலகி அதிமுகவில் இணைந்தார்.அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தவர் தற்போது டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் இருந்தார்.சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பரிதி இளம்வழுதியின் உடலுக்கு,பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.