October 12, 2018
தண்டோரா குழு
பராமரிப்பு பணி காரணமாக உலக அளவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இன்டர்நெட் ஷட்-டவுன் செய்யப்பட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய நவீன உலகம் இணையதளம் மூலம் தான் இயங்குகிறது என்றே சொல்லலாம். அப்படி இருக்கையில் நாள்தோறும் இணையதளம் பயன்படுத்தாதவர்களை காண்பதே அரிதுதான். இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு உலக அளவில் இணையத்தை பயன்படுத்துவது சிக்கலானதாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இணையதளத்தை நிர்வகிக்கும் அமைப்புகளில் ஒன்றான ICANN, சர்வர்களில் இருக்கும் க்ரிப்டோகிராஃபிக் கீ-யை மாற்றும் என்று சொல்லப்படுகிறது. இந்த கீ தான், இணையத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் கருவியாக செயல்படுகிறது. தொடர்ச்சியாக உலக அளவில் சைபர் க்ரைம்கள் அதிகமாக நடந்து வரும் நிலையில் ICANN, இதை எல்லாம் தடுக்கும் வகையில் உலகம் முழுக்க இந்த சர்வர்களிலும், டொமைன் நேம் சிஸ்டம்களிலும் பெரிய மாற்றம் செய்யப்பட உள்ளது.இதனால், சுமார் 48 மணி நேரத்துக்கு உலக அளவில் இணையத்தை பயன்படுத்துவது சிக்கலானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தசெய்தி இணையதளவாசிகளுக்கு பெரிதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.