October 12, 2018
தண்டோரா குழு
“மீடூ” குறையை நியாயமான முறையில் சொல்ல வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
“அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும் என அறிவிக்கும் தைரியம் நாடகம் நடத்துபவர்களுக்கு கூட இருக்கிறது.ஆனால் மழை காரணமாக தேர்தலை தள்ளி போடவேண்டுமா என்பது தான் இங்கே பெரிய கேள்வி.அதிக பொய் வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றோம்.ஆனால் ஆட்சிக்கு வருவோம் என்று நினைக்கவில்லை.அதனால் மக்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியமால் இருக்கிறோம்.கோவிலில் இருப்பவர்களின் துணையில்லாமல் சிலைகள் காணாமல் போக வாய்ப்பு இல்லை.மேலும் பாடகி சின்மயி குற்றசாட்டு குறித்து,குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் கருத்து சொல்ல வேண்டும் விளக்கமளிக்க வேண்டும்.மீ டு குற்றச்சாட்டுகள் நியமாக இருக்க வேண்டும்”.இவ்வாறு பேசினார்.