• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வைரமுத்து மீது நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை – சின்மயி

October 12, 2018 தண்டோரா குழு

வைரமுத்து மீது நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்.சின்மயி தொடர்ந்து தனக்கு பெண்கள் அனுப்பும் குற்றச்சாட்டு பதிவுகளை டுவிட்டரில் ஷேர் செய்த வண்ணம் உள்ளார்.

இந்நிலையில் பேஸ்புக் பக்கத்தில் சின்மயி நேரடி ஒளிபரப்பு ஒன்றை செய்தார்.அதில்,சிறுவயதில் ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கிறது. Metoo மூலம் தற்போது ஆண்களும் தாங்கள் சந்தித்த பிரச்னைகளை கூற தொடங்கி உள்ளனர்.அதேபோல் வைரமுத்து தவறாக நடந்துகொண்டார் என கூறுவதற்கு சக பாடகிகள் பலருக்கு தயக்கம் உள்ளது.வைரமுத்து மீது நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை.என் திருமணத்திற்கு தொடர்பாளர்கள் மூலம் தான் வைரமுத்துவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள் தான் வெட்கப்பட வேண்டும்;நான் வெட்கப்பட மாட்டேன். என்று சின்மயி கூறியுள்ளார்.

மேலும் படிக்க