• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தக்‌ஷா அணி வெற்றிச் சான்றிதழுடன் நடிகர் அஜித்!

October 11, 2018 தண்டோரா குழு

ஆளில்லா விமானத்தை இயக்கும் போட்டியில் அஜித்தின் தக்‌ஷா அணி இரண்டாம் இடம் பிடித்துள்ளதை தொடர்ந்து,அந்த அணியின் வெற்றிச் சான்றிதழுடன் நடிகர் அஜித் காட்சியளிக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித்.சினிமாத்துறையை தாண்டி அஜித்திற்கு கார் பந்தயம்,ஏரோமாடலிங் மீதும் ஆர்வம் அதிகம்.இதனால் சென்னை எம்.ஐ.டி.கல்லூரியின் தக்‌ஷா என்ற மாணவர் குழுவுக்கு ஆலோசகராக இருக்குமாறு நடிகர் அஜித்குமாரை கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்டது.இதற்கு ஒப்புக்கொண்ட அஜித்,இக்குழுவுக்கு ஆலோசகராக இருந்தார்.அந்த குழு இந்திய அளவில் நடைபெற்ற கல்லூரிகளுக்கான டிரோன் போட்டியில் முதலிடம் பெற்றது.

இந்நிலையில்,ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெறவுள்ள ‘மெடிக்கல் எக்ஸ்பிரஸ் – 2018 யுஏவி சேலஞ்ச்’ என்ற போட்டிக்கு நடிகர் அஜித் ஆலோசகராக இருக்கும்,தக்‌ஷா குழு இறுதிசுற்றில் கலந்துக்கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தது.இந்தக் குழுவுக்கு உறுதுணையாக இருந்த நடிகர் அஜித்துக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாராட்டு தெரிவித்துள்ளார்.மேலும்,தக்‌ஷா அணி வெற்றிச் சான்றிதழுடன் அஜித் காட்சியளிக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலகி வருகிறது.

மேலும் படிக்க