• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுடுகாடு அருகே பச்சிளம் குழந்தை! விட்டுசென்றவர்கள் பெற்றோரா? இல்லை கடத்தல் கும்பலா?

October 11, 2018 தண்டோரா குழு

சென்னை அருகே இருவர் கைக்குழந்தையை சுடுகாடு அருகில் வீசிசெல்லும் மனிதாபிமானம் அற்ற காட்சிகள் சிசிடிவி(கண்காணிப்பு) கேமராவில் பதிவாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த பேரூர் காரம்பாக்கம் பகுதியிலுள்ள சுடுகாடு அருகில் பச்சிளம் குழந்தையின் அழுகுறல் கேட்டதை அடுத்து அங்கு சென்ற காவலாளி கேட்பாரற்று கிடந்த பச்சிளம் குழந்தையை பார்த்து அதிர்ந்து போனார்.இதனையடுத்து அக்குழந்தையை அவர் அருகில் உள்ள காவல் சோதனை சாவடியில் ஒப்படைத்தார்.

இதையடுத்து அந்த குழந்தைக்கு அருகிலுள்ள சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு,எழும்பூர் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதனைதொடர்து போலீஸார் பச்சிளம் கைகுழந்தையை அங்கு யார் விட்டுச் சென்றனர் என்ற விசாரணையின் போது,நள்ளிரவில் இருவர் அந்த குழந்தையை பையில் வைத்து சுடுகாட்டில் அருகில் விட்டுச்செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதை பார்த்தனர்.அந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீஸார்,குழந்தையை அங்கு விட்டு சென்றவர்கள் குழந்தையின் பெற்றோரா? அல்லது ஏதேனும் குழந்தை கடத்தல் கும்பல்களை சேர்த்தவர்களா? என விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க