October 10, 2018
தண்டோரா குழு
திரையுலகமே கவியரசு வைரமுத்து மீது மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் நிலையில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் வைரமுத்து மீது பாலியல் புகார் குறித்த டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த சில நாட்களாக பாடகி சின்மயி வைரமுத்து பற்றி பாலியல் குற்றச்சாட்டு வைத்து வருகிறார். இதனால் பலரும் அவரை விமர்சனம் செய்தனர்.சின்மயி தொடர்ந்து தனக்கு பெண்கள் அனுப்பும் குற்றச்சாட்டு பதிவுகளை டுவிட்டரில் ஷேர் செய்த வண்ணம் உள்ளார்.
இதையடுத்து,கவிஞர் வைரமுத்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு அதிரடி கருத்தை பதிவிட்டிருந்தார்.இந்நிலையில்,வைரமுத்து டுவிட்டுக்கு பதிலளிக்கு வகையில் பாடகி சின்மயி வைரமுத்துவின் டுவீட்டை குறிப்பிட்டு வைரமுத்து ஒரு பொய்யர் என டுவீட் செய்துள்ளார்.