• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாயமான பெங்களூர் மாணவி பத்திரமாக திரும்பினார் சினிமாவை மிஞ்சும் திருப்பங்கள்

August 31, 2016 தண்டோரா குழு

பெங்களூரிலிருந்து மாயமான 13 வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டதன் பின்னணியில் அகமதாபாத் ரயில் நிலையத்தின் டிக்கெட் பரிசோதகர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

பெங்களூர் ராஜாஜி நகரிலுள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி பூஜிதா. மதுகிருஷ்ணா என்பவரின் மகளான அவர் கடந்த 24ம் தேதி முதல் திடீரென மாயமானார். அவரது பெற்றோர் அங்குள்ள காவல்துறையிடம் புகார் கொடுத்தனர். மேலும் சிறுமியின் புகைப்படமும் ஊடகங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில் இரு தினங்கள் முன்பு காவல்துறையினர் பூஜிதாவை அவருடைய பெற்றோரிடம் பத்திரமாகத் திரும்பி சேர்த்துள்ளனர். அகமதாபாத் ரயில் நிலைய டிக்கெட் பரிசோதகர் தான் இதற்கு முக்கிய காரணம்.

கணித பாடத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்த வருத்தத்தில் இருந்த சிறுமி, சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியேறத் திட்டமிட்டு, ஸ்கூல் பேக்கில் யாருக்கும் தெரியாமல் ஆடைகளை எடுத்து வைத்துக் கொண்டு, பள்ளிக்குக் சென்றுள்ளார். பள்ளி முடிந்ததும் யாருக்கும் தெரியாமல் நைசாக ஓட்டம் பிடித்து, பெங்களூர் ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

ஹாசன் மாவட்டம் அரிசிகெரே செல்லும் ரயில் நிற்பதைப் பார்த்து அதில் ஏறியுள்ளார். பின்னர் அங்கிருந்து மும்பை வழியாக அகமதாபாத்துக்கு ரயிலில் சென்றுள்ளார். ரயில் நிலையத்தில் சிறுமியை பார்த்த டிக்கெட் பரிசோதகர் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் அந்தச் சிறுமியை அப்படியே விடாமல் அருகில் சென்று அவரிடம் விவரம் கேட்டுள்ளார்.

அப்போது நடந்த விஷயங்களைத் தெரிந்து கொண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து அகமதாபாத் காவல்துறையினர், பெங்களூர் காவல்துறையை தொடர்பு கொண்டு விவரம் கேட்டபோது, அது மாயமான சிறுமி பூஜிதா என்பது உறுதியானது. பெங்களூர் காவல்துறையினர் பூஜிதாவின் பெற்றோருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

மேலும், மும்பையிலிருந்து பெங்களூருக்கு பூஜிதாவை ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். மகிழ்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோருக்கு மற்றொரு கவலையும் வந்தது. வரும் வழியில் சிறுமி வேறு எங்கும் இறங்கி போய்விடக் கூடாதே என்ற கவலைதான் அது. எனவே, பெங்களூரிலிருந்து சுமார் 450 கிலோமீட்டர் முன்பாக உள்ள ஹூப்ளி நகரிலுள்ள தங்கள் உறவினர்களுக்குத் தகவல் சொல்லி, ரயில் அங்கு வரும்போதே பூஜிதாவை இறக்கிவிட கேட்டுக்கொண்டனர்.

அவ்வாறே ஹூப்ளியில் அவருடைய உறவினர்கள் சிறுமியை ரயிலில் இருந்து இறக்கிக்கொண்டனர்.

அதற்குள் ஹூப்ளி சென்ற பூஜிதாவின் பெற்றோர், பிரிந்த குழந்தை பத்திரமாக வந்ததைப் பார்த்து கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

மேலும் படிக்க