• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பழுதடைந்த அரசு பேருந்தின் நிலையை வீடியோ எடுத்து வெளியிட்ட ஓட்டுனர் பணி இடைநிக்கம்

October 8, 2018 தண்டோரா குழு

பழனி அருகே அரசு பேருந்தின் நிலையை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஓட்டுநா் விஜய்குமார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் அரசுப் பேருந்துகளின் பயணிகள் கட்டணம் கடுமையாக உயா்த்தப்பட்டது. இதனால் பேருந்து சேவையை நம்பி இருக்கும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழைக் காரணமாக தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் அரசுப் பேருந்துகள் பழுதடைந்து , ஓட்டை, உடைசல் காரணமாக பேருந்தின் உள்ளேயும் மழை பெய்கிறது.

இதற்கிடையில், பழனியில் அரசு பேருந்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் விஜய்குமார் தான் இயக்கும் பேருந்தின் நிலையை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவுட்டுள்ளார். அதில் முறையாக பிரேக் இல்லை மழை தண்ணீர் பேருந்தின் உள்ளே விழுகிறது இப்படி ஆபத்து நிறைந்த பேருந்தை தினமும் இயக்கிறேன் என்று வீடியோவில் பேசி பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலானது.

இந்நிலையில், வேலை நேரத்தில் வேலை செய்யாமலும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கூறி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க