October 8, 2018
தண்டோரா குழு
பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடக்கிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக தலைவர் முக ஸ்டாலின்சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,
“பல்கலைக் கழகங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்து ஆளுநர் பேசியிருப்பது வேதனை அளிக்கிறது. ஊழல் குறித்து வெளியிட்டுள்ள ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேடிக்கையாக உள்ளது.பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடக்கிறது. பல்கலை கழக முறைகேடு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. ஊழல் குறித்து ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம்; நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்” என்றார்.
மேலும், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தைரியம் இல்லாமல், அதிமுக அரசு தலைமைச் செயலாளரை வைத்து தேர்தலை தள்ளி வைத்துள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிட்டால் மக்களால் விரட்டியடிக்கப்படுவோம் என்கிற அச்சத்தில் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.