October 8, 2018
தண்டோரா குழு
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பே கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் இன்று மதியம் சுமார் 2 மணியளவில் இருந்து லேசான மழை பெய்ய துவங்கியது.சிறிது நேரத்தில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் திடீரென இடி இடிக்கும் சத்தம் கேட்டது.இதனைத்தொடர்ந்து தாவரவியல் பூங்கா புல் தரையின் மத்தியில் இருக்கும் நூற்றாண்டு பழமைவாய்ந்த மரம் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.
இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.தீயணைப்பு துறையினர் கொட்டும் மழையிலும் மரத்தில் பற்றிய தீயை அணைக்க போராடி வருகின்றனர்.மழை பெய்து கொண்டிருந்ததால் பூங்காவில் சுற்றுலா பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் நடைபெறவில்லை.