October 8, 2018
தண்டோரா குழு
பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து உச்சத்தை எட்டிய நிலையில் பொதுமக்கள் கடும் சிரமத்கிற்கு உள்ளாகியுள்ளனர்.இதனை கண்டித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றதை தொடர்ந்து மத்திய அரசு கடந்த வாரம்2.50 ரூபாயை குறைத்தது.தற்போது 85.26 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோலும்,டீசல் விலை 78.04 விற்கபட்டு வருகிறது.
இந்த விலை உயர்வை கட்டுபடுத்த மத்திய அரசு விலை குறைத்து போல மாநில அரசும் அதிகாரதிற்கு உட்பட்டு விதிக்கும் மதிப்பு கூட்டு வரியை குறைக்க வலியுறுத்தி ஹிந்து மக்கள் பரிஷத் அமைப்பினர் குதிரையில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
மேலும்,மக்களின் சிரமத்தை போக்கிட மாநில அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அக்கட்சியினர்,இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் மக்கள் மாட்டு வண்டி,குதிரை வண்டிகளில் அதிகம் பயணிக்க நிலைக்கு தள்ளபடுவார்கள்.எனவே உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.குதிரையுடன் மனு அளிக்க வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.