• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எவரெஸ்டில் ஏறியதாக பொய் சொன்ன இந்திய தம்பதிக்கு 10 ஆண்டுகள் தடை விதித்தது நேபாள அரசு

August 31, 2016 தண்டோரா குழு

உலகிலேயே மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டில் ஏறியதாகப் போலியான புகைப்படத்தைச் சமர்ப்பித்த இந்திய தம்பதிகள் மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற நேபாள அரசு பத்து ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த தினேஷ், தாரகேஸ்வரி ரதோட் தம்பதியர் கடந்த மே மாதம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதாகப் புகைப்படம் எடுத்து நேபாள அரசிடம் சமர்ப்பித்தனர்.

மேலும், இந்தப் புகைப்படத்தை உண்மையென்று நம்பிய நேபாள அரசு தம்பதியர் மலையேறியதாகச் சான்றிதழ் அளித்தது. ஆனால், அவை, கம்ப்யூட்டர் மென்பொருள் உதவியுடன் திருத்தப்பட்ட போலி புகைப்படங்கள் என்று சக மலையேற்ற வீரர்கள் சந்தேகம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து விசாரணை செய்த நேபாள சுற்றுலாத்துறை, இருவரின் மலையேறும் புகைப்படமும் போலியானது என்பதைக் கண்டறிந்தது.

அத்துடன், அந்தத் தம்பதியர் மலையேறிய சான்றிதழை ரத்து செய்ததுடன், மேலும் 10 ஆண்டுகள் இருவரும் மலையேறத் தடை விதித்துள்ளது. இது குறித்து நேபாள சுற்றுலாத்துறையின் தலைவர் சுதர்சன் பிரசாத் தக்கல் கூறும்போது, இந்திய தம்பதிகள் இருவரும் வேறு ஒரு இந்திய தம்பதியினரின் புகைப்படத்தில் தங்கள் படங்களை ஒட்ட வைத்து ஏமாற்றியுள்ளனர்.

அது குறித்து நடத்தப்பட்ட விசாரணைக்கு இருவரும் எந்த ஒத்துழைப்பும் தரவில்லை. இதனால் இருவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை பிற பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க