October 6, 2018
தண்டோரா குழு
போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் 2018ம் ஆண்டின் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்திய பணக்காரர்கள் பட்டியலில், 10 ஆண்டுகளை தொடர்ந்து இந்த ஆண்டும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தை பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு 47.3 பில்லியன் டாலர்கள் இந்தியா மதிப்பில் 34 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
இரண்டாவது இடத்தை விப்ரோ நிறுவனத்தின் தலைவர் ஆசிம் பிரேம்ஜி பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 21 பில்லியன் டாலராகும் இந்திய மதிப்பில் சுமார் 15 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாயாகும். தொழிலதிபர் லட்சுமி மிட்டல் 18.3 பில்லியன் டாலருடன் 3வது இடத்தை பிடித்துள்ளார். இது இந்திய சொத்து மதிப்பின் படி சுமார் 13 லட்சத்து 48ஆயிரம் கோடியாகும். ஹிந்துஜா சகோதரர்கள் என அழைக்கப்படும் அசோக், கோபிசந்த், பிரகாஷ், ஸ்ரீசந்த் ஆகியோர் 4வது இடத்தை பிடித்துள்ளனர். இவர்களது சொத்து மதிப்பு 18 பில்லியன் டாலர் இந்திய மதிப்பில் சுமார் 13 லட்சத்து 26 ஆயிரம் கோடியாகும்.
பூர்ஜி பல்லோஞ்ஜி குழுமத்தின் தலைவர் பல்லோஞ்ஜி மிஸ்த்ரி 5 வது இடத்தையும் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஷிவ் நாடார் 6வது இடத்தையும் பெற்றுள்ளார். 14 பில்லியன் டாலருடன் கோத்ரேஜ் குழுமம் 7வது இடத்தையும் தொழிலதிபர் திலீப் சங்க்வி 12.6 பில்லியன் டாலருடன் 8வது இடத்தையும் பிடித்துள்ளார்.