• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான தேதியை அறிவித்திடுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

October 6, 2018 தண்டோரா குழு

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான தேதியை அறிவித்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில்,

ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்கள் குறித்த தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் மழைக்காரணமாக தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் வேண்டாம் என தமிழக அரசு கடிதம் எழுதியதாகவும், அதனடிப்படையில் இடைத்தேர்தலுக்கான தேதியை இப்போது அறிவிக்க இயலாது எனவும் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாததற்கு சொல்லப்பட்ட காரணங்கள் எதுவும் பொருத்தமானதாக இல்லை.

ஏற்கனவே, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தாமல் உள்ளாட்சி அமைப்புகள் முடமாகியுள்ளன. இதுபோன்று ஜனநாயக வழிமுறைகளை கைவிடுகிற போக்கு மக்களுடைய பிரச்சனைகளை ஜனநாயக ரீதியில் எதிர்கொள்ள உதவிடாது. தமிழக இடைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிப்பு வராதது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் முறையாகவும், நேர்மையாகவும் நடைபெற உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென தலைமை தேர்தல் ஆணையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க