October 6, 2018
தண்டோரா குழு
தமிழகத்திற்கு விடப்பட்டிருந்த ரெட் அலர்ட் (அதி கனமழை எச்சரிக்கை) விலக்கிக் கொள்ளப்படுவதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன்,
அரபிக்கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறி ஓமன் நோக்கி நகர்ந்து விடும். புயல் சின்னம் ஓமன் வளைகுடாவுக்கு நகர்வதால் ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது.மேலும் அக்டோபர் 8-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை அல்லது மிதமான மழை பெய்யும்.குமரிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு கடல்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.மத்திய, தென்கிழக்கு அரபிக் கடல்பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனக் அவர் கூறினார்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் காரைக்காலில் 12 செ.மீ மழையும், விழுப்புரத்தில் 2 12 செ.மீ மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்தார்.