• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான் எப்பவுமே களத்துல தான் இருக்கேன் வேலுமணிண்ணே – அமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் டுவீட் !

October 5, 2018

அதிமுக அரசை கண்டித்து, கோவை மாவட்டம் பனப்பட்டி கிராமத்தில், திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது ஊழல் அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள். இப்போதுள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் வீடு புகுந்து திருடவில்லை. அந்த அளவுக்கு மோசமான ஆட்சி நடைபெறுகிறது. மேலும், கோவையில் 2 வருடங்களுக்கு மேலாக பொதுப்பணித்துறையில் இருந்து டெண்டர் விடப்பட்டும் 8 குளங்கள் தூர் வாரப்படமால் இருப்பதாகவும் 8 குளத்தில் இருந்து ஒரு குளத்தையே காணவில்லை எனவும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், உதயநிதி ஸ்டாலின் பேசிய இந்த வீடியோ காட்சியை ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அமைச்சர் வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில்,

நீங்க க(கு)ளத்தில் இறங்கிப் பார்த்து பேசுங்க தம்பி. எழுதிக்குடுக்கறதை அப்படியே பேசறீங்களே சரி பார்க்காமல்! வாங்களேன் எங்க ஊர் குளங்களை பார்க்க.தூர்வாரப்பட்டு தண்ணீர் நிரம்பி நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து இருக்கிறது. கோவை ஒரு முன் உதாரணம் என தமிழ்நாட்டுக்கே தெரிந்து இருக்கிறது என பதிலளித்துள்ளார்.
இதையடுத்து அமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதாரத்துடன் பதிலளித்துள்ளார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,

நான் எப்பவுமே களத்துல தான் இருக்கேன் வேலுமணிண்ணே உங்கள் ஊழல் குளம் கோவையில இருப்பதற்கான ஆதாரத்தை போட்டோவா போட்டிருக்கேன். தமிழ்நாட்டில் கோவையை ஊழலுக்கே முன்னுதாரணமாக கொண்டு வந்தவர் நீங்கள்! விரைவில், நீதிமன்றத்திலும் – மக்கள் மன்றத்திலும் பதில் சொல்லத் தயாராக இருங்கள்!

என குளத்தின் போட்டோகளுடன் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க