October 5, 2018
தண்டோரா குழு
இயற்கை சீற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தோனேசியா மக்களுக்கு கூகுள் நிறுவனம் இந்திய மதிப்பில் 7கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.
இந்தோனேஷிய கடல் பகுதிகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பளு நகரத்தை ஆழி பேரலைகள் தாக்கியுள்ளது. அந்த தீவுகளில் ஏற்ப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுவில் 7.5 ஆகா பதிவாகியுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்கு இதுவரை 1,400 மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாகவும் 2,500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உள்ளதாகவும் ,இன்னும் பலரை காணவில்லை என்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிக்கரிக்க கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடுமையான இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படுள்ள இந்தோனேசியாவிக்கு கூகிள் நிறுவனம் (10 மில்லியன் அமெரிக்க டாலர்) அதாவது இந்திய மதிப்பில் ரூ.7 கோடியே 33 இலட்சம் நிதியுதவி (நிவாரணமாக)அளித்துள்ளது.