October 5, 2018
தண்டோரா குழு
தமிழக கேரளா எல்லை பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பில் உள்ளோம். பாதுகாப்பு ஏற்பாடுகள் சீராக உள்ளது கோவை மேற்கு மண்டல IG யாக புதிதாக பொறுப்பேற்று கொண்ட பெரியய்யா கூறியுள்ளார்.
கோவை மேற்கு மண்டல ஐஜி யாக பெரியய்யா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
மேற்கு மண்டலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து இடங்களிலும் பொது மக்கள் உதவியுடன் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.போக்குவரத்து சீர் செய்யப்படும். மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்த NSD என்ற தனி நிர்வாகம் உள்ளது அதை அவர்கள் முறையாக செய்து வருகின்றனர். மேலும் தமிழக காவல்துறை சார்பில் தமிழக கேரளா எல்லை பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பில் உள்ளோம். பாதுகாப்பு ஏற்பாடுகள் சீராக உள்ளது எல்லையோர பகுதிகளில் சோதனை சாவடிகள் பலப்படுத்தப் படும். மேலும் தமிழக கேரளா எல்லையோர பகுதியில் வசிக்கும் கேரளா மற்றும் தமிழக மக்கள் ஒருவருக்கு ஒருவர் மிகுந்த உதவியாக இருக்கின்றனர். மேலும் அந்த பகுதிகளில் வெளியாட்கள் புகுந்தால் உடனடியாக தகவல்களை வழங்கு கின்றனர். தேவைப்படும் பட்சத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.