• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 1500 பொது குழாய்களை மூடிவிட்டு அங்கு தண்ணீர் ஏ.டி.எம் அமைப்பது என்பது சரியானதல்ல – ஜி .ராமகிருஷ்ணன்

October 4, 2018 தண்டோரா குழு

கோவையில் 1500 பொது குழாய்களை மூடிவிட்டு அங்கு தண்ணீர் ஏ.டி.எம் அமைப்பது என்பது சரியானதல்ல என சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர்,

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100 இடங்களில் 300 சதுர அடியில் இடம் ஏ.டி.எம் அமைத்து தண்ணீர் விற்பனை செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தனியார் நிறுவனம் மூலம் போர் போட்டு நிலத்தடி தண்ணீரை எடுத்து தனியார் நிறுவனம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு இருக்கின்றது. மாநகராட்சியின் இந்த முடிவு மக்களிடம் கடுமையான பாதிப்புகளை உருவாக்கும். 1500 பொது குழாய்களை மூடிவிட்டு அங்கு தண்ணீர் ஏ.டி.எம் அமைப்பது என்பது சரியானதல்ல, தண்ணீருக்காக தனியார் நிறுவனங்களை நம்பி இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

தமிழக அமைச்சர்கள் மீது தொடர்ந்து லஞ்ச புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றது. சூயஸ் நிறுவனத்திற்கு கான்டிராக்ட் விட்டது, சென்னை கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் போன்றவற்றில் ஊழல் நடைபெற்றுள்ளது. குற்றச்சாட்டுக்குள்ளான தமிழக அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். 15 மாணவர்கள் இருக்கும் அரசு பள்ளிகளை மூடும் எண்ணத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். வானிலை மையம் 12 சதவீதம் வடகிழக்கு பருவ மழை கூடுதலாக இருக்கும் என சொல்லி இருக்கின்றது. வானிலை அறிவிப்பு வெளியாகியும் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்திற்கு பின்பாவது தமிழக அரசு மழை நிவாரணப்பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். ஸ்டெர்லைட் எதிராக போராட்டம் நடைபெறும் நிலையில், இரண்டாவது யூனிட்டை திறக்கும் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தஞ்சை சாஸ்திரா பல்கலை ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தை மீட்பதில் அரசு பாரபட்சம் காட்டுகின்றது என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் படிக்க