October 4, 2018
தண்டோரா குழு
சாலை பாதுகாப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வை 42 நகரங்களில் ஏற்படுத்திவிட்டு வெற்றியோடு கோவை திரும்பிய மாற்றுத்திறனாளிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ். மாற்றுத்திறனாளியான இவர், அரசு மருந்தகத்தில் மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சாலை பாதுகாப்பையும், தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு கார் பயணத்தை பிரின்ஸ் கடந்த 24 ஆம் தேதி துவங்கினார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இப்பயணம் தமிழகம் முழுவதும் 42 நகரங்கள் வழியாக ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று
பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதையடுத்து 10 நாட்கள் கழித்து வெற்றிகரமாக தனது பயணத்தை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நிறைவு செய்தார். மாற்றுதிறனாளியான பிரின்ஸ் காரை எக்ஸ்லெட்டரை கையால் இயக்கும் வகையில் வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனி நபராக இப்பயணம் மேற்கொண்டவருக்கு 42 நகரங்களிலும் மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்து ஊக்கப்படுத்தியதாக தெரிவித்தார்.