October 4, 2018
தண்டோரா குழு
பெரியகுளம் அருகே 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் 3 பேருக்கு அம்மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில், 2014ம் ஆண்டு டிசம்பரில் 10 வயது சிறுமி திடீரென மாயமானார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடினர். அப்போது அங்குள்ள கிணற்றில் சிறுமியின் உடல் சடலமாக கண்டெக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இது தொடர்பாக சுந்தர்ராஜ், ரூபின், குமரேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கொடூர வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற சுந்தர்ராஜ், ரூபின், குமரேசன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது தேனி மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளது. அதைபோல் சிறுமியின் தாயாருக்கு கருணை தொகை வழங்கவும் தேனி மகிளா நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.