October 3, 2018
தண்டோரா குழு
கேரளாவின் இடுக்கி, பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
கேரளா அண்மையில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழை பெய்தது. மிகப்பெரும் இயற்கை பேரிடரை சந்தித்த கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 350 -க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மாநிலத்தில், பல மாவட்டங்களில் வெள்ளத்தில் மிதந்தன. தற்போது கேரள மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) அறிக்கையின் படி, வரும் ஞாயிற்றுக்கிழமை கனமழை மிக மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது. அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக மாறி வருவதால் இரண்டு மாநிலங்களில் கனமழை தரும் பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இடுக்கி, திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், அம்மாவட்டங்களில் ”ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவுரை கூறியுள்ளார்.