October 2, 2018
தண்டோரா குழு
ஐ எம் எஃப் சர்வதேச நாணய நிதியத்திற்கு தலைமை பொருளாதார நிபுணராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த கீதா கோபிநாத்(46) பொருளாதாரம் மற்றும் செலாவனி குறித்த பணிகளில் திறம்பட செயல்படுபவர் என அறியப்பட்டவர்.தற்போது இப்பதவியில் இயங்கிவரும் மௌரிஸ் அப்ஸ்ட்ஃபெல்ட் கடந்த ஜூலை மாதத்தில் ஓய்வு பெற்றார்.இதையடுத்து அவருக்கு அடுத்தபடியாக இப்பதவிக்கு கீதா கோபிநாத் வரவுள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை நிர்வாகி பதவியை ஏற்கவுள்ள முதல் பெண்மணி இவர்.
கீதா கோபிநாத் தற்போது கேரள முதலமைச்சர் பினராய் விஜயனின் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.ஐ எம் எஃப்பின் இப்பதவிக்கு வரும் இரண்டாவது இந்தியர் இவர் தான்.இதற்கு முன் முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் இப்பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.