• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி கட்டையால் அடித்துக்கொலை

August 30, 2016 தண்டோரா குழு

கரூரில் ஒரு தலைக்காதல் விவகாரத்தில் சக மாணவியைக் கட்டையால் அடித்துக் கொன்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடியருகில் உள்ள பார்த்தனூரைச் சேர்ந்தவர் பெரியசாமி.இவரது மகன் உதயகுமார்(24).

இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இஞ்சினியரிங் படித்து வந்தார்.இதே கல்லூரியில் சிவகங்கை மாவட்டம்,மானாமதுரையை சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் சோனாலி(21) என்பவரும் படித்து வந்துள்ளார்.இவரை உதயகுமார் ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார்.

ஆனால் அவனது குணம் தெரிந்த சோனாலி அவரது காதலை நிராகரித்துள்ளார்.இதையடுத்து உதயகுமார் கல்லூரியில் மது போதையில் வந்து சோனாலியிடம் தகராறு செய்ததால்,கல்லூரி நிர்வாகம் அவரைக் கல்லூரியில் இருந்து நீக்கிவிட்டது.இந்நிலையில்,இன்று காலை கட்டணம் கட்டவேண்டும் எனப் பொய் கூறிவிட்டு கல்லூரிக்கு வந்த உதயகுமார்,சோனாலி வகுப்பறையில் படித்துக்கொண்டு இருப்பதையறிந்து வகுப்பறைக்குச் சென்று தன்னைக் காதலிக்குமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளார்.

இதனை சோனாலி மறுத்ததால் ஆத்திரமடைந்த உதயகுமார் கல்லூரி டேபிளில் இருந்த பெரிய கட்டையால் சோனலியின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார்.இதனைப் பார்த்து சகமாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் தடுத்த போது அவர்களையும் உதயகுமார் தாக்கியுள்ளார்.

இதனைப் பார்த்து பயந்துபோன அவர்கள் கல்லூரி பேராசிரியர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

பின்னர்,மேல்சிகிச்சைக்கு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதையெடுத்து கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பியோடிய உதயகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சோனாலி கொலை செய்யப்பட்டதை அடுத்து கல்லூரி நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க