October 2, 2018
தண்டோரா குழு
கோவையில் மாவட்ட அளவிலான புறாக்களுக்கான போட்டி நடைபெற்றது.
கோவை மாவட்டம் கணபதி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் புறாக்களுக்கான போட்டிகள் இன்று நடைபெற்றது.கோவை பிஜீயன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் முதன் முறையாக போட்டிகள் நடத்தப்பட்டது.போட்டியில் சாதா புறா,கர்ண புறா,இரட்டை சாதா மற்றும் இரட்டை கர்ண புறா உள்ளிட்ட புறாக்கள் போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டிகளின் விதிப்படி காலை 7 மணிக்கு புறாக்களை பறக்கவிட்டு,பிறகு இரவு சரியாக எட்டு மணிக்கு புறாக்களின் உரிமையாளர்கள் வீட்டிற்கு வந்தடைய வேண்டும் என்பதே விதிமுறை.இதன்படி சரியான நேரத்திற்கு வந்தடைந்த புறாக்களே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு கோப்பை மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்டது.
பல்வேறு வகையான புறாக்கள் போட்டிகளில்,காந்தாமணி,லட்சுமணன்,மனோகரன்,அச்சுஹாசன் உள்ளிட்டோர் முதலிடத்தை பெற்றனர்.சேலம்,நாமக்கல்,மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டிக்காக புறாக்கள் வந்ததுள்ளது.