• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வயிற்றில் குழந்தையுடன் ஒய்யார நடை நடந்தது மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது. கரீனா கபூர்

August 30, 2016 தண்டோரா குழு

கருவில் குழந்தையுடன் பேஷன் வீக்கில் பங்கேற்று ஒய்யார நடை நடந்த தருணம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது என பாலிவுட் நடிகை கரீனா கபூர் கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகை கரீனா கபூர்(34).இவரது கணவர் நடிகர் சயீப் அலி கான்.கரீனா கபூர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.இந்நிலையில் மும்பையில்,அழகு சாதனை பொருட்கள் நிறுவனத்தின் சார்பில்,பேஷன் வீக் நடைபெற்றது.கடந்த ஞாயிற்றுக்கிழமை இறுதி நாளன்று கரீனா கபூர் ஒய்யார நடை நடந்து வந்தார்.அந்த ஆடை அரச குடும்பத்து மணப்பெண் அணிவது போல் இருந்தது.

அந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக இருக்கும் கரீனா,பிரபல ஆடை வடிவமைப்பாளர் சபியா சச்சி வடிவமைத்த எம்பிராய்டரி செய்யப்பட்ட அழகிய ஆலிவ் பச்சை ஆடைகளை அணிந்து ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்.இது குறித்து கரீனா கபூர் கூறும் போது, இந்த பேஷன் வீக்கில் பங்கேற்றது மறக்க முடியாத ஒன்றாகும்.

ஏனெனில், நான் மட்டும் இங்கு ‘ரேம்ப் வாக்’ நடந்து வரவில்லை.என்னுடைய கருவில் வளரும் குழந்தையும் இதில் பங்கேற்றது தான் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி.முதல் முறையாக நானும் எனது குழந்தையும் சேர்ந்து இந்த பேஷன் வீக் நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது என தெரிவித்தார்.

மேலும் படிக்க