September 29, 2018
தண்டோரா குழு
சென்னையைச் சேர்ந்த நடிகை ஒருவர் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தனக்கு கடந்த சில ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக ஃபேஸ்புக் லைவ் மூலம் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையை சேர்ந்த 42 வயதாகும் அந்த தமிழ் நடிகை, 8 நிமிடங்களுக்கு ஃபேஸ்புக் லைவ் மூலம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பேசியுள்ளார். தற்போது அந்த லைவ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் பேசுகையில்,
‘எனது கணவர் ஹாங்காங்கில் இறந்த பின்னர், எனது மகன் பாஸ்போர்ட்டில் இருக்கும் சிக்கலை சரி செய்து தருவதாக கூறி மூத்த பத்திரிக்கையாளர் பிரகாஷ் எம்.சுவாமி என்பவர் என்னை தொடர்பு கொண்டார். இதையடுத்து எனது வீட்டுக்கு வந்த அவர், என்னிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முயன்றதால் அவரை வீட்டிலிருந்து வெளியே அனுப்பிவிட்டேன். எனினும், அவர் வாட்ஸ் ஆப் மூலம் எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். இதுமின்றி என்னைக் குறித்து அவதூறான செய்திகளை பரப்பிவிடுவதாக அவர் மிரட்டியும் என் கணவரை கொன்றது நான் தான் என்பது போல பல தவறான தகவல்களை அவர் பரப்பியும் வந்தார். அதைபோல் இது குறித்து ஒரு செய்திக் கட்டுரையையும் ஒரு வார இதழில் அவர் வெளியிட வைத்தார்’. பல பெண்களுக்கு அவர் இது போன்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ‘உயர் அதிகாரிகளுடனும் அமைச்சர்களுடனும் அவர் இருக்கும் படங்களை பலருக்குக் காட்டுவார். தனக்கு நிறைய பேரைத் தெரியும் என்பது போல பலரிடம் அவர் சொல்லிக் கொண்டு, அவர்களை பயன்படுத்திக் கொள்வார் எனக் கூறியுள்ளார்.
மேலும், அதன் வீடியோவில் போலீஸிடம் இது குறித்து புகார் அளித்த போது, எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை. சி.எஸ்.ஆர் தான் பதிவு செய்யப்பட்டது’ என்று கூறி எஸ்.ஆர் நகலை காண்பித்தார். இது குறித்து பெண்கள் காவல் நிலையத்திடம் கேட்டபோது, ‘போன் மற்றும் இணையதளம் சம்பந்தப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் குறித்து சைபர் க்ரைம் துறையிடம் புகார் அளித்துள்ளோம்’ என்றது. சைபர் க்ரைம் துறையை தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி எனது போன் அழைப்புகளுக்கு பதில் அளிக்கவில்லை.
இதனால் அவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும். அவர் கைது செய்யப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் பிரகாஷ் சுவாமி, நடிகையின் குற்றச்சாட்டுகள் குறித்து கூறும்போது,
‘நடிகையின் மகன் பாஸ்போர்ட் குறித்த சிக்கலை சரி செய்து தருவதாக நான் கூறினேன். ஆனால், அவர் வீட்டுக்கு நான் சென்றதில்லை’ என்று கூறியுள்ளார்.