• Download mobile app
04 May 2026, MondayEdition - 3736
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை விருகம்பாக்கத்தில் கேரள போலீஸ் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு !

September 29, 2018 தண்டோரா குழு

சென்னையைச் சேர்ந்த மஹாராஜா என்பவர் கேரளாவில் நிதி மோசடி செய்த புகாரில் கைது செய்தபோது உறவினர்கள் தடுத்ததால் வானத்தை நோக்கி கேரள போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

சென்னை, நெற்குன்றம், நடேசன் நகரை சேர்ந்தவர் மஹாராஜா, 41. வழக்கு ஒன்று தொடர்பாக இவரை பிடிக்க, கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், பல்லுருதிக்காவல் நிலையத்தை சேர்ந்த, 8 காவலர்கள் இன்று(செப்.,29) மதியம், 1:00 மணியளவில், நெற்குன்றம் சென்றனர். அப்போது அவரது உறவினர்கள் கைது செய்யக் கூடாது என்று தடுத்தனர். மஹாராஜா நிதி மோசடி செய்தது குறித்து போலீஸார் உறவினர்கள் எடுத்துக் கூறியும் அவர்கள் ஒத்துழைக்கவில்லை. இதனால் கேரள போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, மஹாராஜவை விருகம்பாக்கம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க