• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையா ? விஜய் சேதுபதி விளக்கம்

September 29, 2018 தண்டோரா குழு

தன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக வந்த செய்தியையடுத்து நடிகர் விஜய் சேதுபதி இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விஜய் சேதுபதி. தனது இயல்பான நடிப்பில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். பல வருடங்களுக்கு கால்ஷீட் புக் ஆகிவிட்ட நிலையில் செம பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் மணிரத்னத்தின் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படம் நேற்று வெளியானது.அடுத்தாக 96 படம் வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள விஜய் சேதுபதியின் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது தெரியவந்துள்ளது.

எனினும், வரி ஏய்ப்பு நடந்ததால்தான் இந்த சோதனை நடைபெற்றது என்று வருமான வரித்துறை வட்டாரத்திலும், வரி ஏய்ப்பு என்று ஏதும் இல்லை. இது வழக்கமான ஆய்வுதான் என்று விஜய்சேதுபதி தரப்பிலும் கூறப்பட்டது.

இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி,

’நான் குடும்பத்துடன் லக்னோ சென்று நேற்றுமதியம்தான்சென்னைதிரும்பினேன். எனது வீடு மற்றும் அலுவலகத்திற்கு வருமான வரித்துறையினர் வந்தது உண்மைதான். ஆனால், சோதனை நடைபெறவில்லை ஆய்வு செய்யத்தான் அதிகாரிகள் வந்தனர். என்னுடையவீடு, அலுவலகம் மட்டும் இல்லாமல் என் சகோதரியின் வீடுகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.எந்த காலத்திலும் அரசை ஏமாற்றும் எண்ணம் எனக்கு இருந்தது இல்லை. வருமானத்தை நேர்மையாக கணக்கு காட்டி வரிகளை சரியாக செலுத்தி வருகிறேன்.கணக்கு வழக்கு விவகாரங்களில் எப்போதும் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன்.

ஆனால், சில ஆண்டுகளாக எனக்கு வரிவிவரங்களை பார்த்துக்கொண்ட ஆடிட்டரால் வருமானவரியில் சிறுகுழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த குழப்பத்தைபோக்கிக்கொள்ளவருமானவரித்துறையினர்வந்தனர்.குழப்பம் தீர்ந்ததால் சென்றுவிட்டனர். ஆடிட்டரின் அலட்சியத்தினால் ஜிஎஸ்டி ஆய்வை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. தொழிலில்இந்தஅளவிற்குஅலட்சியத்துடன்செயல்பட்டஆடிட்டரைமாற்றிவிட்டேன்’’எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க