September 28, 2018
தண்டோரா குழு
கோவை பேரூர் பகுதியில் நேற்று முன் தினம் நடைபெற்ற திமுக கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக அமைச்சர்களை பற்றி அவதூறாக பேசியதாக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பேரூர் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் அளித்த புகாரின் அடிப்படையில்,திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி,கோவை சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்,திமுக நிர்வாகிகள் சேனாதிபதி, முத்துசாமி,சூர்யா வெற்றி கொண்டான் மற்றும் சி.ஆர்.ராமச்சந்திரன் உட்பட ஏழு பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 15/18 u/s 294/b,504,505,153A ஆகிய 4 பிரிவுகளின் கீழ் பேரூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.