• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிய கோப்பை கிரிக்கெட்:இந்தியா-பாகிஸ்தான் நாளை மீண்டும் மோதல்

September 22, 2018 தண்டோரா குழு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை இந்திய அணி பாகிஸ்தானுடன் மீண்டும் மோதுகிறது.

14–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 15–ந் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றது.இதில் நடப்பு சாம்பியன் இந்தியா,இலங்கை பாகிஸ்தான்,வங்காளதேசம் உள்பட 6 அணிகள் கலந்துக் கொண்டுள்ளது.

இதில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில்,சூப்பர் 4 போட்டிகள் நேற்று முதல் தொடங்கியது.இதில் இந்தியா,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ் அணிகள் தகுதி பெற்றன.முதல் போட்டியில் இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதின.இதில்,இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.இதில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை போராடி வென்றது.

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள போட்டியில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.ஏற்கனவே நடந்த ‘லீக்‘ ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க