• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு கோலி மற்றும் மீராபாய் சானுவின் பெயர் பரிந்துரை!!

September 17, 2018 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி,பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு இருவருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை பரிந்துரை செய்துள்ளது.

இந்திய அரசால் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக கருதப்படுவது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது.கடந்த 1991ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இவ்விருதை இதுவரையில் 34 பேர் மட்டுமே பெற்றுள்ளனர்.இந்நிலையில்,இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி மற்றும் பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகிய இருவரின் பெயர்களை விளையாட்டுத் துறை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.மேலும்,இந்திய கிரிக்கெட் அணியில் இதுவரை சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்.எஸ்.தோனி இருவர் மட்டுமே இந்த விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க