• Download mobile app
19 Mar 2026, ThursdayEdition - 3690
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்- சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவு

September 6, 2018 தண்டோரா குழு

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர்,முன்னாள் டிஜிபி ஜார்ஜ்,சென்னை முகப்பேரில் உள்ள டிஜிபி ராஜேந்திரன் வீடு,விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடி உரிமையாளர்,முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இந்த சோதனை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோதனையை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவராவ்,உமாசங்கர் குப்தா,உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன்,கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன் தரகர்கள் நந்தகுமார்,ராஜேஷ் ஆகிய 6 பேர் சிபிஐ அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டனர்.இதையடுத்து,அவர்கள் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து குடோன் உரிமையாளர் மாதவராவ் உள்ளிட்ட 5 பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில்,குட்கா தயாரிப்பு நிறுவனர் சீனிவாச ராவ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க