• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது என புகார் அளிப்பது மாநில தலைவருக்கு அழகில்லை – ஜி.ராமகிருஷ்ணன்

September 4, 2018 தண்டோரா குழு

அரசியல் கட்சி தலைவர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்,விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது என புகார் அளிப்பது, மாநில தலைவருக்கு அழகில்லை என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,

“கோவை மாநகராட்சி முழுவதும் 24 மணி நேரம் குடிநீர் விநியோகத்திற்காக கோவை மாநகராட்சி நிர்வாகம் சூயஸ் நிர்வாகத்துடன் போட்டுள்ள ஒப்பந்ததை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஐந்து அலுவலங்கள் முன்பும் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட உள்ள அமைப்புகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.மேலும் இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகவும்,உடனடியாக மக்கள் போராட்டங்கள் மூலம் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார்.கோவை தேசிய பஞ்சாலை தொழிலாளர்களின் பேச்சு வார்த்தைக்கு இது வரை நிர்வாகம் வரவில்லை உடனடியாக அழைத்து பேச வேண்டும்.

மாணவி சோபியா விவகாரத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் மனித உரிமையை பறிக்க கூடிய நிலையை மத்திய மாநில அரசு மேற்கொண்டுள்ளது. பெண்ணின் தந்தை பாஜக தலைவர் மீது புகார் அளித்துள்ளார்,ஆனால் அந்த புகார் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.தலைவர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்,விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது என புகார் அளிப்பது மாநில தலைவருக்கு அழகில்லை.கேரளா முதல்வர் பிணராயி விஜயன் தலையை கொண்டு வந்தால் 1 கோடி ரூபாய் என அறிவிப்பை வெளியிட்டனர்,ஆனால் தொண்டர்கள் ஆவேத்தில் பேசுவதை எல்லாம் பெரிதுபடுத்த முடியாது,அமைதியாக தான் இருந்தார்”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க