• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சிக்கு பணம் இல்லை. அரவிந்த் கெஜ்ரிவால்.

August 24, 2016 தண்டோரா குழு

இந்திய தலைநகரான தில்லியில் ஆளும் கட்சியாக இருந்தாலும்,தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சிக்கு பணம் இல்லை என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தென் மேற்கு மாநிலமான தெற்கு கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும்,தில்லி முதல்வருமான,அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், தில்லியில் ஒன்றரை ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்து வரும் நிலையிலும் தேர்தலில் போட்டியிட எங்கள் கட்சிக்கு பணம் இல்லை என்பது தான் உண்மை.

எனது வங்கி கணக்கை நான் உங்களிடம் காண்பிக்கிறேன்.எங்கள் கட்சியின் வங்கி கணக்கிலும் பணம் இல்லை.இருந்த போதிலும்,கோவா மற்றும் பஞ்சாப் மற்றும் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காகப் பிரச்சாரத்தை துவங்கியுள்ளோம்.

மேலும், தில்லியில் நாங்கள் போட்டியிடும் போது உண்மையில் போட்டியிட்டது நாங்கள் அல்ல ஆனால் தில்லி மக்கள் தான் போட்டியிட்டனர் என்றும் ஒவ்வொருவரும் தங்கள் நல்ல எதிர்காலத்திற்காகப் போராட சிறந்த தளத்தை ஆம் ஆத்மி கட்சி ஏற்படுத்திக் கொடுத்தது என்று கூறினார்.

கோவாவிலும் அதே போன்ற நிலை தான் உள்ளது.கோவா தேர்தலிலும் உள்ளூர் மக்கள் தான் போட்டியிட உள்ளனர்.கோவாவில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால்,இங்குள்ள கலாச்சாரம் மேம்படுத்தப்படுவதோடு கோவா மக்கள் தான் கோவாவை ஆட்சி செய்வார்கள்.

அதோடு தேர்தல் அறிக்கை குறித்து நான் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க மாட்டேன்.கோவா மக்கள் இதற்கான உத்தரவைத் தருவார்கள்.மாநிலத்தின் பிரச்சினைகளை அறிந்து கொள்ளவே இங்கு வந்துள்ளேன்.கோவாவில் போதைப் பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாநில அரசு விரும்பினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

மேலும்,போதைப் பொருள் விற்பனை செய்யும் நபர்களுக்கும் காவல்துறைக்கும் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளது.இதன் காரணமாக போதைப்பொருள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.காவல்துறை மூலமாக அரசியல்வாதிகளுக்கு பணம் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க