September 4, 2018
தண்டோரா குழு
சென்னை வந்த மு.க.அழகிரியை விமான நிலையத்தில் வரவேற்ற திமுக நிர்வாகி ஒருவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கருணாநிதியின் 30-வது நினைவு நாளையொட்டி,சென்னையில் வருகிற 5ம் தேதி அமைதி பேரணி நடத்தப் போவதாக கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி அறிவித்துள்ளார்.இதற்காக கடந்த வாரம் மதுரையில் தனது தொண்டர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.இந்நிலையில் மு.க.அழகிரி நேற்று மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார்.
இதனையடுத்து ரவி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.இந்நிலையில்,சென்னை விமானநிலையத்திற்கு வந்த மு.க.அழகிரியை,அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்.அப்போது திமுகவைச் சேர்ந்த ரவி என்பவர் வரவேற்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.