September 3, 2018
தண்டோரா குழு
உலகில் ஏதேனும் ஒரு இடத்தில ஒருவேளை கூட உணவு கிடைக்காமல் பலரும் தவித்து வருகிறார். ஆனால், நாள்தோறும் பல்வேறு விழாக்களில் உணவு பொருட்கள் வீணாடிக்கப்பட்டு வருகிறது. இதனால் வீணடிக்கப்படும் உணவு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எஸ்.எம்.கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் பிரதீப் நாயர் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியுள்ள குறும்படம்” மா “.
இக்குறும்பத்தை இன்று இந்தியன் தொழில் வர்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளனத்தின் தலைவர் லட்சுமி நாராயணன் யூ டியூபில் வெளியிட்டார்.
இக்குறும்படத்தின் தயாரிப்பாளரும் எஸ்.எம்.நிறுவனத்தின் இயக்குனருமான சதீஷ் கூறுகையில்,
வீடுகள்,நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் நாள்தோறும் வீணடிக்கப்படும் உணவுகளின் அளவை பார்த்து வியந்தேன். உணவு வீணடிப்பதன் தாக்கத்தை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தேன். அப்படி தோண்டியதே மா குறும்படத்தின் எண்ணம். மா என்பது சமஸ்கிரத மொழியில் இனிமேல் வேண்டாம் என்பதாகும். குறும்படம் பார்வையார்களின் மனதில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எனக் கூறினார்.
இக்குறும்படத்தின் இயக்குநர் பிரதீப் நாயர் கூறுகையில்,
மா’ தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் குறைந்த உரையாடல்களுடன் ஆங்கில சப்டைட்டில்களை கொண்ட எஸ் எம் கார்ப்பரேஷனின் முயற்சியாகும். படத்தின் கால அளவு ஐந்து நிமிடங்களுக்கும் குறைவு என்றாலும், அது பார்வையளர்கள் வீணாக்கும் உணவுப் பொருளைக் குறைப்பதற்கு ஊக்குவிக்கும் வலுவான செய்தியை தெரிவிக்கும் என கூறினார்.