September 1, 2018
தண்டோரா குழு
மூன்று மாதங்களில் 500 பள்ளிகளில் அதிநவீன அறிவியல் ஆய்வுக் கூடம் கொண்டு வரப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் பள்ளியில், மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எல்.பி.வேலுமணி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்,
மாபெரும் புரட்சி ஏற்படுத்தி உள்ள உள்ள பாட திட்டம் மாற்றத்திற்கான முக்கிய காரணம் அக்குழுவின் குழு தலைவர் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் கல்வி ஆர்வளர்களுக்கு பாராட்டை தெரிவித்தார். இது போல இந்த மாதம் முதல் வாரத்தில் இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மற்றும் 7, 8 10, 12 ஆகிய 8 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்ற செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், புதிதாக திறனாய்வு மேற்பாட்டிற்கான 12 பாட திட்டத்தை இணைக் உள்ளதாகவும், இதன் மூலம் 12 ஆம் வகுப்பு முடித்த உடன் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும் எனவும் மாணவர்கள் பல்வேறு ஆராய்ச்சி செய்ய உதவியாக 500 பள்ளிகளில் அட்டல் டிங்கர் லேப் எனப்படும், அதிநவீன அறிவியல் ஆய்வுக் கூடம் மத்திய மாநில அரசுகளின் முயற்சி மூலம் மூன்று மாதங்களில் கொண்டு வரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.