September 1, 2018
தண்டோரா குழு
அஞ்சல் துறையின் பேமண்ட்ஸ் பேங்க் வங்கி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
டெல்லியில் உள்ள டல்காட்டோரா விளையாட்டு அரங்கத்தில் இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.அதேநேரத்தில் நாடு முழுவதும் உள்ள 650 அஞ்சலகங்களில் மத்திய மந்திரிகள் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர்.இந்திய அஞ்சலக வங்கி தொடக்க விழாவில் சுமார் 50,000 கணக்குகள் தொடங்கப்பட்டன
ஐபிபிபி (I.P.P.B) வங்கிகளில் சேமிப்பு,தற்போதைய கணக்குகள்,பண பரிமாற்றம்,நேரடி சலுகைகள் பரிமாற்றம்,கட்டணம் செலுத்துதல் போன்ற பல சேவைகள் இதில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சலக வங்கி சேவை திட்டத்தை ரிசர்வ் வங்கி நிர்வகிக்க உள்ளது.வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் நாடு முழுவதும் உள்ள 1.55 லட்சம் அஞ்சலகங்களில் இந்த “இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க்” திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.