• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மன்னிப்புக்கே இடமில்லை. நடிகை ரம்யா திட்டவட்டம்

August 24, 2016 தண்டோரா குழு

பாகிஸ்தானைப் புகழ்ந்து பேசியதற்காக நடிகை ரம்யா மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.எனினும் பாகிஸ்தான் குறித்துத் தான் பேசியதற்காக மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,நடிகையுமான ரம்யா, பாகிஸ்தானில் நடைபெற்ற சார்க் நாடுகளின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டார்.இதன் பின்னர் பெங்களூர் திரும்பிய அவர் தமது அனுபவங்களை ஊடகங்களில் பகிர்ந்துகொண்டார்.

அப்போது “பாகிஸ்தான் மக்கள் நம்மைப் போலவே சாதாரணமாகத் தான் வாழ்கின்றனர் என்றும் இந்தியாவிலிருந்து சென்ற எங்களுடன் மிகுந்த நட்புடன் பழகினர் எனவும் கூறினார்.மேலும், அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியது போன்று அது நரக தேசம் அல்ல.நல்ல நாடாகவே இருக்கிறது” என்று கூறியிருந்தார்.

இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும், வழக்கறிஞர் ஒருவர், ரம்யா மீது தேசத்துரோக வழக்கு தொடர்ந்தார்.அந்தப் புகாரின் பேரில் ரம்யா மீது வழக்குப்பதிவு செய்யுமாறும் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ரம்யா,பாகிஸ்தானைப் புகழ்ந்து பேசியதற்காக மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.மேலும், இந்த மனு மீதான விசாரணை வரும் 27-ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க