• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெங்களூரு அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து டேனியல் வெட்டோரி நீக்கம்

August 31, 2018 தண்டோரா குழு

பெங்களூரு அணியின் தலைமைப்பயிற்சியாளர் டேனியல் வெட்டோரியை ஆர்சிபி நிர்வாகம் நீக்கியுள்ளது.பெங்களூர் அணியின் புதிய தலைமைப்பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் என்றழைக்கப்படும் ஐபிஎல் போட்டி கடந்த 2008ம் ஆண்டு முதல் நடைபெற்றது. இதில் பிரபல தொழிலதிபர் விஜய் விஜய் மல்லையா பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் உரிமையாளராக உள்ளார்.இந்த அணியில் நான்கு ஆண்டுகள் வீரர்,நான்கு வருடங்கள் தலைமை பயிற்சியாளர் என, மொத்தம் 8 வருடங்கள் பெங்களூரு அணியில் இருந்து வந்தார் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி. எனினும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றது கிடையாது.

இதற்கிடையில்,2018-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிறப்பான பல வீரர்கள் இருந்தும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பிளே ஃஆப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை.இந்நிலையில் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரியை ஆர்சிபி நிர்வாகம் நீக்கியுள்ளது. ங்களூர் அணியின் புதிய தலைமைப்பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கேரி கிறிஸ்டன் கூறுகையில்,

“கடந்த ஆண்டு பெங்களூர் அணிக்கு வெட்டோரி தலைமையில் பேட்டிங் பயிற்சி அளித்தேன்.என்னால் முடிந்த அளவு சிறப்பான பணியை அணிக்கு வழங்குவேன். அணி நிர்வாகத்துக்கு நன்றி. இனி வரும் ஆண்டுகள் சிறப்பாக அமையும்” என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க