• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜாம் பஜாரில் காய்கறி விற்ற நடிகை சமந்தா!!

August 31, 2018 தண்டோரா குழு

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.இவர் அண்மையில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை சமந்தா ஆந்திராவில் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சைக்கு உதவி வருகிறார்.இவர் சினிமாவில் நடித்துக்கொண்டு அதே நேரத்தில் பிரதியுஷா என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி சமூகப் பணிகள் செய்து வருகிறார்.

இந்நிலையில்,நடிகை சமந்தா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டில் காய்கறி விற்றுள்ளார்.ரசிகர்கள்,வியாபாரிகள்,பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.அவர்கள் அதிக பணம் கொடுத்து சமந்தாவிடம் இருந்து போட்டி போட்டு காய்கறிகளை வாங்கினார்கள்.சிறிது நேரத்திலேயே கடையில் இருந்த அத்தனை காய்கறிகளும் விற்று தீர்ந்தன.

சமந்தா இவ்வாறு செய்ததற்கு காரணம்,தெலுங்கில் லக்ஷ்மி மஞ்சு நடத்தி வரும் தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் ஏழை மக்களுக்கு உதவி செய்ய ஒரு நாள் கூலி வேலை பார்த்து சம்பாதித்த பணத்தை அளிக்கிறார்களாம்.அதனால் தான் அவர் இவ்வாறு காய்கறி விற்றுள்ளார். இதையடுத்து,இதில் வசூலான தொகை முழுவதையும் நலிந்த மக்களுக்கு வழங்கப் போவதாக சமந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க