August 30, 2018
தண்டோரா குழு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தயக்கமில்லை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என நேற்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“அரசின் அனுமதி கிடைத்ததும் திருவள்ளூர் மாவட்டத்தில் தங்கள் கட்சி தத்தெடுத்துள்ள அதிகத்தூர் கிராமத்தில் 100 கழிவறைகள் கட்டும் பணிகள் தொடங்கப்படும்.கலைஞர் புகழஞ்சலி கூட்டத்துக்கு அழைப்பு வந்திருப்பதாகவும்,ஆனால்,தாம் அதில் பங்கேற்கவில்லை என்றார்.
மேலும்,மத்தியில் பாஜக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டுமென்று திமுக தலைவர் பேசியிருப்பது குறித்த கேள்விக்கு,அது அவரது கருத்து என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார்.அதைபோல் இடைத்தேர்தலை சந்திக்க மக்கள் நீதி மய்யம் தயங்கவில்லை எது சரியோ அதை செய்வோம் எனக் கூறியுள்ளார்”.