• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் இங்கிலாந்து அணி பேட்டிங்

August 30, 2018 தண்டோரா குழு

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும்,ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

இதைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்ட்டில் 31 ரன் வித்தியாசத்திலும்,லண்டனில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இதையடுத்து டிரென்ட் பிரிட்ஜியில் நடந்த 3-வது டெஸ்டில் 203 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.இதன் மூலம் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.இந்நிலையில்,இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று தொடங்கியது.

இப்போட்டியில்,டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.இப்போட்டியில் இந்தியா தரப்பில் 3-வது டெஸ்டில் விளையாடிய அதே அணியே விளையாடுகிறது.இங்கிலாந்து அணி தரப்பில் காயம் காரணமாக வோக்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் இன்றைய போட்டியில் விளையாடவில்லை.அவர்களுக்கு பதிலாக இளம் வீரர் சாம் குர்ரன் மற்றும் மொயின் அலி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கேப்டன் ஜோ ரூட் தெரிவித்தார்.

மேலும் படிக்க